/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நந்தனா பேலஸ் 5வது கிளை அண்ணா நகரில் திறப்பு
/
நந்தனா பேலஸ் 5வது கிளை அண்ணா நகரில் திறப்பு
ADDED : ஜூன் 29, 2025 12:09 AM
சென்னை, ஆந்திர உணவு வகைகளை சிறந்த முறையில் வழங்கி வரும் நந்தனா பேலஸ் ேஹாட்டல், சென்னையில் ஓ.எம்.ஆர்., சாலை சிப்காட், வேளச்சேரி 100 அடி சாலையில் லட்சுமி நகர், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை மற்றும் அண்ணா சாலை என, நான்கு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அண்ணா நகர் 12வது பிரதான சாலை, 4வது அவென்யூ, சாந்தி காலனியில், ஐந்தாவது கிளையை, கலாநிதி வீராசாமி எம்.பி., மோகன் எம்.எல்.ஏ, அடையார் ஆனந்த பவன்குழு நிர்வாக இயக்குனர்கள் வெங்கடேசன், சீனிவாசராஜா ஆகியோர், நேற்று முன்தினம் திறந்து வைத்தனர்.
நந்தனா பேலஸில், அமராவதி ட்ரைய் சிக்கன், குண்டூர் ட்ரைய் சிக்கன் மற்றும் மீன் வறுவல் மற்றும் மட்டன் பெப்பர் ட்ரைய் உள்ளிட்டவை, மிகவும் பிரபலம் வாய்ந்தவை.
இந்நிகழ்வில் நந்தனா பேலஸ் தலைவர் ரவிச்சந்தர் கூறுகையில், ''சென்னை மற்றும் பெங்களூரில் நந்தனா பேலஸ், 26 கிளைகளை கொண்டுள்ளது.
தரம், சிறந்த துரித சேவை மற்றும் நல்ல அனுபவங்களை நந்தனா பேலஸ் அளிக்கிறது. சென்னையின் 5வது கிளையை அண்ணா நகரில் துவங்கியதில், மகிழ்ச்சி அடைகிறோம்,'' என்றார்.