sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நங்கநல்லுார் குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜ மகாசபை கூட்டம்

/

நங்கநல்லுார் குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜ மகாசபை கூட்டம்

நங்கநல்லுார் குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜ மகாசபை கூட்டம்

நங்கநல்லுார் குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜ மகாசபை கூட்டம்


ADDED : அக் 14, 2024 02:35 AM

Google News

ADDED : அக் 14, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கநல்லுார்:சென்னை நங்கநல்லுார், ராம் நகரில் உத்தர குருவாயூரப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டுமானம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலைப் போல அமைந்திருந்தாலும், மரத்தால் கட்டப்படாமல் கான்கிரீட் வாயிலாக கட்டப்பட்டது.

இக்கோவிலில் விநாயகர், பிரசன்ன வெங்கடேஷ்வரர், பகவதி, அய்யப்பன், சங்கர்ஷணர், நவக்கிரஹ சன்னிதிகள் உள்ளன. குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் என்ற அறக்கட்டளை, இக்கோவிலை 1970ம் ஆண்டிற்கு முன் இருந்து நிர்வகித்து வருகிறது.

இக்கோவில் கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது.

ஐந்தடி உயரத்திற்கு ஜாக்கி வைத்து கோவில் உயர்த்தப்பட்டு திருப்பணி முடிக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

இந்நிலையில், கோவிலை நிர்வகித்து வரும் ஆஸ்திக சமாஜத்தின் அங்கத்தினருடைய மகாசபை கூட்டம், நேற்று மாலை 3:30 மணிக்கு, நங்கநல்லுார், ராம் நகர் இரண்டாவது சாலையில் உள்ள ஸ்ரீ நாராயண பிரவசன மண்டபத்தில் நடந்தது.

குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜ அங்கத்தினர் மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

தலைவர் ராஜகோபாலன் உறுப்பினர்களை வரவேற்றார். செயலர் சுப்ரமணியன் வருடாந்திர கணக்குகளை, உறுப்பினர்களிடம் சமர்ப்பித்தார். இணை செயலர் பாலாஜி, நன்றியுரையாற்றினார்.






      Dinamalar
      Follow us