/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்நிலையம் செல்ல புது வழித்தடம் தேவை நங்கநல்லுார் குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
/
ரயில்நிலையம் செல்ல புது வழித்தடம் தேவை நங்கநல்லுார் குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
ரயில்நிலையம் செல்ல புது வழித்தடம் தேவை நங்கநல்லுார் குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
ரயில்நிலையம் செல்ல புது வழித்தடம் தேவை நங்கநல்லுார் குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 14, 2025 12:22 AM
நங்கநல்லுார், ஆதம்பாக்கத்தில் மேம்பால ரயில்வே போக்குவரத்து விரைவில் துவக்கப்பட உள்ள நிலையில், நங்கநல்லுார் பகுதியில் இருந்து ரயில்நிலையம் செல்வதற்கு புது வழித்தடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரியுள்ளனர்.
சென்னை, வேளச்சேரி- --- மவுன்ட் இடையேயான மேம்பால ரயில் திட்டம், நில ஆர்ஜிதம் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதற்கு தீர்வு எட்டப்பட்டு, மேம்பால ரயில் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை மேம்பால ரயில் போக்குவரத்து, ஓராண்டுக்கு முன்பே இயக்கப்படும் என கருத்தப்பட்டது.
ஆனால், எதிர்பாரா விதமாக நங்கநல்லுார், தில்லை கங்காநகர் பகுதியில் மேம்பால துாண் ஒன்று பாரம் தாங்காமல் உடைந்து கீழே விழுந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.ஐ.ஐ., தொழில்நுட்ப வல்லுானர்கள் உதவியோடு பணிகள் முடிக்கப்பட்டது. விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, சில மாதங்களில் ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், நங்கநல்லுார் பகுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பகுதி வாசிகள் கூறியதாவது:
நங்கநல்லுாரில் ராம்நகர், இந்திராநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளடங்கி உள்ளன. அங்கு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ளோர் ஆதம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு, தில்லை கங்காநகர் அல்லது மேடவாக்கம் பிரதான சாலை என, 1 கி.மீ., பயணித்து செல்ல வேண்டும்.
அதற்கு மாற்றாக ராம்நகர், நான்காவது சாலையில் ரயில் நிலையம் செல்லவதற்கு வழித்தடம் அமைக்க வசதி உள்ளது. அந்த வழித்தடம் அமைத்தால், 100 மீட்டரில் ரயில் நிலையத்தை அடைந்து விடலாம்.
எனவே, ரயில்வே துறையும், மாநகரட்சியும் இணைந்து, ரயில்நிலையம் திறப்பதற்கு முன், புதிய வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.