ADDED : ஜன 17, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், சென்னை புழல் மத்திய சிறையில், நேற்று முன் தினம் சிறை போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விசாரணை சிறை பகுதியில், பந்து போல் உருண்டு இருந்த பிளாஸ்டிக் பை கிடந்தது. அதில், 100 கிராம் கஞ்சா, 25 ‛நைட்ரோவிட்' எனப்படும் போதை மாத்திரை ஆகியவை இருந்தன.
அவற்றை கைப்பற்றி, இது குறித்து புழல் போலீசில் புகார் செய்தனர். போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மூலம், அதை வீசியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

