/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய தன்னியக்க ட்ரோன் போட்டி: அம்ரிதா விஷ்வ மாணவர்கள் சாதனை
/
தேசிய தன்னியக்க ட்ரோன் போட்டி: அம்ரிதா விஷ்வ மாணவர்கள் சாதனை
தேசிய தன்னியக்க ட்ரோன் போட்டி: அம்ரிதா விஷ்வ மாணவர்கள் சாதனை
தேசிய தன்னியக்க ட்ரோன் போட்டி: அம்ரிதா விஷ்வ மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 07, 2026 06:08 AM

சென்னை: எஸ்.ஏ.இ., அமைப்பு சார்பில் நடந்த தேசிய தன்னியக்க ட்ரோன் போட்டியில், 'அம்ரிதா விஷ்வ வித்யா பீடம்' பல்கலை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
எஸ்.ஏ.இ., எனும் 'சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ்' சார்பில் தேசிய தன்னியக்க ட்ரோன் போட்டி சென்னையில் நடந்தது. இதில், அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் பல்கலை மாணவர்களின் 'குவாண்டம் ரியல்எம்' குழு சாதனை படைத்தது.அவர்கள் வடிவமைத்த ட்ரோன், கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான திறன்கள் கொண்டிருப்பதை, வெற்றிகரமாக காட்சிப்படுத்தினர்.
மாணவர் அணியின் செயல்திறனை பாராட்டி, 1 லட்சம் ரூபாய் பரிசும், வேகமான மற்றும் துல்லியமான அணியாகத் தேர்வு செய்யப்பட்டதற்காக 10,000 ரூபாய் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இந்த அணிக்கு பேராசிரியர்கள் வழிகாட்டுதலுடன், பல துறை மாணவர்கள் இணைந்து பணியாற்றினர். மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் வகையில், இந்த வெற்றி அமைந்துள்ளது.
சாதனை படைத்த மாணவர்களை, பல்கலையின் நிர்வாக இயக்குநர் விநயாமிர்தானந்த சுவாமி, வளாக இயக்குநர் ஐ.பி.மணிகண்டன், சென்னை வளாக முதல்வர் ஜெயகுமார் ஆகியோர் பாராட்டினர்.

