/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இல்லாத நிலத்தை விற்று ரூ.52 லட்சம் மோசடி: மூவர் கைது
/
இல்லாத நிலத்தை விற்று ரூ.52 லட்சம் மோசடி: மூவர் கைது
இல்லாத நிலத்தை விற்று ரூ.52 லட்சம் மோசடி: மூவர் கைது
இல்லாத நிலத்தை விற்று ரூ.52 லட்சம் மோசடி: மூவர் கைது
ADDED : பிப் 07, 2026 06:08 AM

ஆவடி: இல்லாத நிலத்தையே, 52 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து, 'பலே' மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு, ஏ.கே.ஆர்., சாலை, நியூ காலனியைச் சேர்ந்தவர் சுதாகர், 40. இவரிடம் 2018ல் அம்பத்துார், புதுாரைச் சேர்ந்த ராமலிங்கம், 47, கருக்கு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், 61, இவரது சகோதரர் கோபால், 62, ஆகியோர், அம்பத்துார், மேனாம்பேடில் தங்களுக்கு, 2,215 சதுர அடி இடம் இருப்பதாக கூறியுள்ளனர்.
சுதாகர் அந்த இடத்தை, 52 லட்சம் ரூபாய் கொடுத்து கிரையம் பெற்றுள்ளார். அந்த இடத்தை அளக்க, வருவாய் துறையினரை நாடியபோது, அந்த சர்வே எண்ணில் இடமே இல்லை என்பது தெரியவந்தது.
இது குறித்து பணத்தை திருப்பி கேட்டபோது, மூவரும் அலைக்கழித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் சுதாகர் புகார் அளித் துள்ளார்.
விசாரித்த நிலப்பிரச்னை தீர்வு பிரிவு தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து, ராமலிங்கம், சந்திரசேகர் மற்றும் கோபாலை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

