sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 நிறுவனத்தில் பணம் கையாடல்: மேலாளர் உட்பட இருவர் கைது

/

 நிறுவனத்தில் பணம் கையாடல்: மேலாளர் உட்பட இருவர் கைது

 நிறுவனத்தில் பணம் கையாடல்: மேலாளர் உட்பட இருவர் கைது

 நிறுவனத்தில் பணம் கையாடல்: மேலாளர் உட்பட இருவர் கைது


ADDED : பிப் 07, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 07, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்: ஐ.டி., பயிற்சி நிறுவனத்தில், 29 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேலாளர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம், பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 43; அண்ணா நகர் மூன்றாவது அவென்யூவில், ஐ.டி., சார்ந்த பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் செயல்படும் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா செயல்பாடு மற்றும் காட்சிகள் சேமிப்பு தன்மை குறித்து, கடந்தாண்டு நவ., 25ல் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, நிறுவனத்தில் மேலாளர் சுரேஷ் மற்றும் ஒரு பெண் இணைந்து, சில கேமராக்களை செயலிழக்க வைத்தது தெரிந்தது.

சந்தேகமடைந்த அவர், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தபோது, 29 லட்சம் ரூபாயை சுரேஷ் உட்பட ஆறு பேர் சேர்ந்து கையாடல் செய்திருப்பது தெரிந்தது.

இதுகுறித்த ஜெயகுமார் புகாரின்படி வழக்கு பதிந்து அண்ணா நகர் போலீசார் விசாரித்ததில், பயிற்சி பெற வருவோரிடம் நேரடியாக பணத்தை பெற்றதோடு, நிறுவனத்திற்கு வரவேண்டிய லாபத்திலும் கையாடல் செய்திருப்பது தெரிந்தது.

இவ்வழக்கில் தொடர்புடைய அயனம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 40, அவருக்கு உடந்தையாக இருந்த திருவேற்காடு அலெக்ஸ், 25, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பெண் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us