/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மகாராஷ்டிரா தகுதி
/
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மகாராஷ்டிரா தகுதி
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மகாராஷ்டிரா தகுதி
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம், மகாராஷ்டிரா தகுதி
ADDED : ஜன 19, 2025 12:14 AM

சென்னை, எஸ்.ஜி.எப்.ஐ., எனும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து, 68வது தேசிய கூடைப்பந்து போட்டியை, செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில் நடத்துகின்றன.
மாணவியருக்கான இப்போட்டியில், தமிழகம், பீஹார், புதுடில்லி, புதுச்சேரி உட்பட, நாடு முழுதும் இருந்து, 33 மாநில அணிகள் பங்கேற்று, 'லீக்' மற்றம் 'நாக் - அவுட்' முறையில் மோதுகின்றன.
நேற்று காலை நடந்த முதல் காலிறுதியில், தமிழகம் மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஓ., அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 59 - 58 என்ற கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்ற ஆட்டங்களில், மஹாராஷ்டிரா அணி, 56 - 40 என்ற கணக்கில் பஞ்சாப்பையும், டி.பி.எஸ்., அணி, 68 - 48 என்ற கணக்கில், கர்நாடகாவையும், சி.ஐ.எஸ்.சி.இ., அணி, 42 - 41 என்ற கணக்கில் கேரளாவையும் வீழ்த்தின. போட்டியில் வெற்றி பெற்ற நான்கு அணிகளும், அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.