/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி 'கிரெடாய்' நடத்தியது
/
தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி 'கிரெடாய்' நடத்தியது
தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி 'கிரெடாய்' நடத்தியது
தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி 'கிரெடாய்' நடத்தியது
ADDED : மார் 05, 2024 12:32 AM
சென்னை,
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' அமைப்பின் தொழில் திறன் மேம்பாட்டு கமிட்டி சார்பில், பணியிட பாதுகாப்புக்கான தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், அண்ணா பல்கலை, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், எஸ்.ஆர்.எம்., ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி, வி.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பொறியியல் பிரிவு தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
கட்டுமான துறையில் பணியிட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது, கற்பிப்பது குறித்து இதில் கருத்துகள் பகிரப்பட்டன.
கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் பேசுகையில், ''கட்டுமான துறையில் பணியிட பாதுகாப்பு என்பது பணியாக மட்டுமல்லாது, ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கு பொறுப்பு என்ற நிலையில் கடைப்பிடிக்கிறோம். ஒவ்வொரு செங்கல் கட்டும் பணியிலும், இதை உறுதிசெய்கிறோம்'' என்றார்.

