/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தேசிய தலைவர்' படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு
/
'தேசிய தலைவர்' படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு
ADDED : அக் 12, 2025 02:15 AM

சென்னை:ஜெ.எம்.பஷீர் நடித்துள்ள தேசிய தலைவர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, வடபழனியில் நடந்தது.
சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்கள் வைத்து, தேசிய தலைவர் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.ஆர்.சத்யா தயாரிப்பில், அரவிந்த்ராஜ் படத்தை இயக்கி உள்ளார். ஜெ.எம்.பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் நடந்தது. இசை அமைப்பாளர் இளையராஜா இசை குறுந்தகடை வெளியிட, நடிகர் பிரபு பெற்றுக்கொண்டார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில், இயக்குநர்கள் பேரரசு, உதயகுமார், ஆர்.கே.சுரேஷ், நடிகை கவுதமி, அ.தி.மு.க., பிரமுகர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், ''இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். மறைக்கப்பட்ட பல வரலாறு, இதில் தைரியமாக கூறியுள்ளனர். இப்படத்தில் சர்ச்சை காட்சிகளும் உண்டு. ஆனால் அது என்னவென்றால், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தேவரின் வாழ்க்கை தான் அது,'' என்றார்.