/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1,500 ஒப்பந்த பணியாளர்கள் கோவில்களில் நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர்
/
1,500 ஒப்பந்த பணியாளர்கள் கோவில்களில் நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர்
1,500 ஒப்பந்த பணியாளர்கள் கோவில்களில் நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர்
1,500 ஒப்பந்த பணியாளர்கள் கோவில்களில் நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர்
ADDED : அக் 12, 2025 02:17 AM

பிராட்வே:''கோவில்களில் பணிபுரியும் 1,500 தொகுப்பூதிய பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு, பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குத்து விளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநிலத் தலைவர் குமார், மாநில இணை செயலர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். மாநில காப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
மாநில கவுரவ தலைவர் முத்துசாமி, மாநில துணைத்தலைவர் தனசேகர், மாநில பொதுச்செயலர் ரமேஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வீட்டு வாடகைபடியை உயர்த்த வேண்டும். கோவில்களில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கோவில்களின் வருமானத்தில் 40 சதவீத சம்பள செலவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பொது நிதியாக ஏற்படுத்தி, அதன் மூலமாக பணியாளர்களுக்கு மாதாமாதம் வழங்க வேண்டும்.
சங்கத்திற்கு சென்னையில் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். குடும்ப நல நிதியை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட ஒன்பது தீர்மானங்கள், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ''கோவில்களில் பணிபுரியும் தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் 1,500 பேர் உடனே பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
''சென்னையில், தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் மாநில சங்கத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து தரப்படும். செயல் அலுவலர் பதவி உயர்வில் கோவில் பணியாளர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.