/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் ஆரோக்கியத்திற்காக மாரத்தான் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நிறைவு
/
உடல் ஆரோக்கியத்திற்காக மாரத்தான் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நிறைவு
உடல் ஆரோக்கியத்திற்காக மாரத்தான் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நிறைவு
உடல் ஆரோக்கியத்திற்காக மாரத்தான் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நிறைவு
ADDED : அக் 12, 2025 02:19 AM

சென்னை:உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, எஸ்.ஆர்.எம்., இயன்முறை கல்லுாரி சார்பில், 'தி பிசியோ ரன் 2025' மாரத்தான் எனும் தொடர் ஓட்டம், தனுஷ்கோடியில் இம்மாதம் 7ல் துவங்கியது.
ஐ.என்.எஸ்., பருந்து கட்டளை அதிகாரி கேப்டன் அர்ஜுன் மேனன், இந்திய கடலோர காவல் துறையின் கமாண்டன்ட் இளவரசன் மற்றும் எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பு துணைவேந்தர் டாக்டர் நிதின் நாகர்கர் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் துவங்கி மதுரை, திருச்சி, பாபுராயன்பேட்டை உள்ளிட்ட எஸ்.ஆர்.எம்., குழும வளாகங்கள் வழியாக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் பல்கலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மொத்தம் 664 கி.மீ.,க்கு இந்த தொடர் ஓட்டம் நடந்துள்ளது.
தொடர் ஓட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப் பேராசிரியர் மரியம் பர்ஸனா கூறுகையில், ''இந்த மாரத்தான் ஓட்டம் வெறும் நிகழ்ச்சி அல்ல, ஆரோக்கியத்திற்கான எங்களின் அர்ப்பணிப்பு,'' என்றார்.
எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பு துணைவேந்தர் டாக்டர் நிதின் எம்.நாகர்கர் கூறுகையில், ''ஆரோக்கியம் என்பது ஒரு சமூகத்தின் பொறுப்பு. தொடர் ஓட்டம் போன்ற முயற்சிகள் ஒன்றிணைந்தால் எதையும் சாதிக்க முடியும்,” என்றார்.
நிறைவு விழாவில், தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.