/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சீனியர் ஹாக்கி ஹரியானா அணி அதிரடி
/
தேசிய சீனியர் ஹாக்கி ஹரியானா அணி அதிரடி
ADDED : நவ 07, 2024 12:47 AM

சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், 14வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.
இதில், நடப்பு சாம்பியன் பஞ்சாப், தமிழகம், டில்லி, கேரளா உள்ளிட்ட 31 அணிகள், எட்டு பிரிவாக மோதி வருகின்றன. 16ம் தேதி வரை, மொத்தம் 53 போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த முதல் போட்டியில், ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரதேச அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான ஆட்டத்தில் 12 - -1 என்ற கோல் கணக்கில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஹரியானா அணி வெற்றி பெற்று அசத்தியது. அணியின் வீரர் ராஜன்ட் நான்கு கோல்களை அடித்து அசத்தினார்.
மற்றொரு போட்டியில் புதுச்சேரி அணி 5 -- 0 என்ற கணக்கில், அருணாச்சல பிரதேச அணியை தோற்கடித்தது. ஒடிசா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், 11 -- 1 என்ற கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. அதில் 4 - -0 என்ற கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது.