/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி: ம.பி., அணி அசத்தல்
/
தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி: ம.பி., அணி அசத்தல்
ADDED : ஆக 04, 2025 04:12 AM

சென்னை:தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி போட்டியில், 9 - 0 என கோல் மழை பொழிந்த மத்திய பிரதேச அணி, டில்லியை தோற்கடித்தது.
ஹாக்கி இந்தியா மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சங்கம் சார்பில், தேசிய சப் - ஜூனியர் ஹாக்கி போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.
போட்டியில், ஏ, பி, சி ஆகிய மூன்று பிரிவுகளில், 29 மாநில அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், ஏழாவது நாளான நேற்று காலை 11:30 மணிக்கு நடந்த, 'ஏ' பிரிவு முதல் போட்டியில், ம.பி., மற்றும் டில்லி அணிகள் எதிர்கொண்டன.
ம.பி., அணி, போட்டியின் 8வது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தது. தொடர்ந்து ஒவ்வொரு 5 முதல் 10 நிமிடங்களில் எதிரணிக்கு எந்தவித வாய்ப்பும் தராமல், அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தது. முடிவில், 9 - 0 என்ற அபார கோல் கணக்கில் டில்லியை தோற்கடித்து, ம.பி., அணி வெற்றி பெற்றது.
அணியின் வீரர்கள் கரண் கவுதம், ஐந்து கோல்கள், மீஜான் உர் ரஹ்மான், ஆஷிர் ஆதில் கான், அன்ஷ் பஹூத்ரா மற்றும் கான் ஆயான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில், சத்தீஷ்கர் அணி, 3 - 2 என்ற கோல் கணக்கில் மஹாராஷ்டிரா அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.