/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் 27 மாநில அணிகள் பங்கேற்பு
/
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் 27 மாநில அணிகள் பங்கேற்பு
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் 27 மாநில அணிகள் பங்கேற்பு
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் 27 மாநில அணிகள் பங்கேற்பு
ADDED : டிச 25, 2024 12:12 AM
சென்னை,
அகில இந்திய 'நெட்பால்' சங்கம் சார்பில், 30வது சப் ஜூனியர் தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை, ஆர்.எம்.கே., பள்ளி மைதானத்தில் டிச., 28ல் துவங்கி, 31ல் நிறைவடைகிறது.
இரு பாலருக்குமான இப்போட்டியில், 27 மாநிலங்களிலிருந்து, 54 அணிகள் பங்கேற்க உள்ளன. வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் என, 1,300 பேர் பங்கேற்கின்றனர்.
இதில், தமிழ்நாடு ஆண்கள் அணி கேப்டனாக வைரவேல் பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் அணி கேப்டனாக லக் ஷனா சாய்ஷா பொ றுப்பு வகிக்கிறார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனையர், ஜூனில் தென்கொரியாவில் நடக்கும் ஆசிய நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, இந்திய அணி சார்பில் பங்கேற்பர்.