/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய டென்னிஸ் போட்டி சென்னை வீரர் அசத்தல்
/
தேசிய டென்னிஸ் போட்டி சென்னை வீரர் அசத்தல்
ADDED : அக் 01, 2025 03:08 PM

சென்னை:
டில்லியில் நடந்து வரும் தேசிய டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், சென்னை வீரர் மனீஷ் சுரேஷ்குமார் வெற்றி பெற்றார்.
டி.சி.எம்., ஸ்ரீராம் நிறுவனம், அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் டில்லி லால் டென்னிஸ் சங்கம் இணைந்து, பெனிஸ்டா ஓப்பன் தேசிய டென்னிஸ் போட்டியை டில்லியில் நடத்துகின்றன.
நாட்டின் சிறந்த டென்னிஸ் வீரர்கள், தங்களது தரவரிசையை அதிகரிக்க, இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இதன் ஒற்றையர் ஆண் கள் பிரிவில், சென்னையின் மனீஷ் சுரேஷ்குமார், ஒடிஷாவின் அம்ருத்ஜெய் மொஹிந் மோதினர். விறு விறுப்பான இப்போட்டியில் அசத்தலாக விளையாடிய மனீஷ் 6 - 3, 6 - 1 என்ற நேர் செட்டில், அம்ருத்ஜெயை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
அதே போட்டியில், பெண்கள் ஒற்றையர் சுற்றில், தமிழகத்தின் மிருதுளா பழனிவேல், தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்டிராவின் வைஷ்ணவி அத்காரை எதிர்த்து மோதினார்.
இதில் வைஷ்ணவி, தமிழகத்தின் மிருதுளாவை 6 - 2, 6 - 4 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.