/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா விமரிசை
/
கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா விமரிசை
ADDED : அக் 01, 2025 02:36 PM

சென்னை:
கவர்னர் மாளிகையில் நடந்த நவராத்திரி விழாவில், பள்ளி மாணவ - மாணவியரின்கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
கிண்டி, ராஜ்பவன் கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி நாட்களில், அம்பாள் கொலு மண்டபத்தில் கவர்னர் ரவி அவரது மனைவியோடு, தினமும் மாலை வேளையில் கலசத்திற்கு பூஜை செய்தார்.
தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், தினமும் நடைபெற்று வந்தன. அந்த வகையில், பெரம்பூர் எஸ்.கே.எம்.எஸ்., விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ - மாணவியரின், சிறப்பு பஜனை உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்களை கவர்னர் பாராட்டி ஊக்கப்படுத்தினார். பொன்விழா கொண் டாடி வரும் விவேகானந்தா பள்ளியின் சார்பாக, கவர்னருக்கு மரத்தால் செய்யப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சிற்பம் வழங்கப்பட்டது.