sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடபழனி ஆண்டவர் கோவிலில் வரும் 3ல் நவராத்திரி விழா துவக்கம்

/

வடபழனி ஆண்டவர் கோவிலில் வரும் 3ல் நவராத்திரி விழா துவக்கம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் வரும் 3ல் நவராத்திரி விழா துவக்கம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் வரும் 3ல் நவராத்திரி விழா துவக்கம்


UPDATED : அக் 01, 2024 06:34 AM

ADDED : அக் 01, 2024 12:20 AM

Google News

UPDATED : அக் 01, 2024 06:34 AM ADDED : அக் 01, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. அப்போது, 'சக்தி கொலு' எனும் பெயரில் பிரமாண்ட கொலு வைக்கப்படுகிறது.

மேற்கண்ட நாட்களில், முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை, அம்மன் கொலு சன்னதியில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்க உள்ளன.

வரும் 4ம் தேதி மாலை 4:15 மணிக்கு மகளிரின் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. அக்., 6ம் தேதி திருமுறை பாராயணம் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கிறது.

ஏகதின லட்சார்ச்சனை


மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை அக்., 11ம் தேதி காலை 7:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் நடக்கிறது.

இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு, 250 ரூபாய் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். லட்சார்ச்சனை முடிவில் அம்பாளின் பிரசாதம் வழங்கப்படும்.

கொலு தரிசனம்


நவராத்தி கொலுவின் ஒவ்வொரு நாளும் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

சக்தி கொலுவை, பக்தர்கள் காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பார்வையிடலாம்.

கொலுவில் அம்மனை தரிசித்து வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி - வினா நடத்தப்படும். அதில் பங்கேற்போருக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வித்யாரம்பம் நிகழ்ச்சி


நவராத்திரியின் நிறைவு பகுதியாக வரும் 12ம் தேதி, விஜயதசமி அன்று 'வித்யாரம்பம்' எனும் நிகழ்ச்சி, காலை 7:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை நடத்தப்படுகிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளின் விரல் பிடித்து, தொடக்கக் கல்வியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us