ADDED : செப் 20, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள, அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், நாளை முதல் அக்., 6 வரை, நவராத்திரி விற்பனை கண்காட்சி நடக்க உள்ளது.
தினமும் காலை 10:00 மணிக்கு துவங்கி, இரவு 8:00 மணி வரை, விற்பனை நடக்கும். கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த பொருட்கள், சிறுதானியங்கள் முதல் நவராத்திரி கொலு பொம்மைகள் வரை, அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.