/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாங்காடு கோவிலில் 2ல் துவங்கும் நவராத்திரி
/
மாங்காடு கோவிலில் 2ல் துவங்கும் நவராத்திரி
ADDED : செப் 27, 2024 12:33 AM
சென்னை, செப். 27-
சென்னை அடுத்த மாங்காடில் காமாட்சி அம்மன், வைகுண்டப் பெருமாள் வகையறா கோவில்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இக்கோவிலில் நவராத்திரி பெருவிழா அக்., 2ல் துவங்கி, 11ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி, லட்சுமி தாமரை புஷ்பம், ராஜேஸ்வரி, காமாட்சி அம்மன் சிவலிங்க பூஜை, கஜலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட அலங்காரம், அம்மனுக்கு சாற்றப்படும். காலை, மாலை வேளைகளில் இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன.
நிறைமணி காட்சி
காமாட்சி அம்மன் கோவிலின் உபகோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலிலும், புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று இனிப்பு, பலகார வகைகள், காய்கனிகள் மற்றும் அரிசி முதலான தானிய வகைகளால் அலங்காரம் செய்யும் நிறைபணி என்ற நிறைமணிகாட்சி விழா, அக்., 17ல் மாலை 6:00 மணிக்கு நடத்தப்படுகிறது.