ADDED : அக் 21, 2026 05:10 PM

அ நிறம் | அளவு
ஜல்லடியன்பேட்டை: பெருங்குடி மண்டலம், ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகர், லோகாம்பாள் தெருவில் இருந்த வேப்ப மரம், நேற்று இரவு பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
சாலையின் குறுக்கே விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், இன்று காலை மரத்தை வெட்டி அகற்றினர்.
