/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'
/
ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'
ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'
ராமாபுரத்தில் கத்திச்சண்டை நேபாள வாலிபர்கள் 'அட்மிட்'
ADDED : மே 05, 2025 04:16 AM
ராமாபுரம்: நேபாள நாட்டைச் சேர்ந்தோர் விக்ரம், 35, கோவிந்த், 38. இருவரும், சென்னை, ராமாபுரம் விவேகானந்தா நகரில் உள்ள துணி வியாபாரம் செய்யும் கிடங்கில், மூட்டை துாக்கும் தொழில் செய்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவர்கள் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதால், மூட்டை அறுக்க பயன்படுத்தும் கத்தியால், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும், கழுத்து, முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன.
கிடங்கில் தங்கியுள்ள சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, ராமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.