/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திமுனையில் மாணவர்களை தாக்கி பணம் பறித்தோருக்கு வலை
/
கத்திமுனையில் மாணவர்களை தாக்கி பணம் பறித்தோருக்கு வலை
கத்திமுனையில் மாணவர்களை தாக்கி பணம் பறித்தோருக்கு வலை
கத்திமுனையில் மாணவர்களை தாக்கி பணம் பறித்தோருக்கு வலை
ADDED : அக் 24, 2025 02:04 AM
பூந்தமல்லி: கத்திமுனையில், மாணவர்களை தாக்கி பணம் பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி, கரையான்சாவடியில் தங்கி கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் இருவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, தங்களது அறைக்கு நடந்து சென்றனர்.
அப்போது, பைக்கில் வந்து வழிமறித்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்களிடம் 300 ரூபாயை, மொபைல் போன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் பறித்தனர்.
மேலும், மாணவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி, காலில் விழ வைத்து சித்ரவதை செய்து தப்பினர்.
இது குறித்து மாணவர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.