/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைகள் பாதுகாப்பு மையம் அண்ணா நகரில் புதிதாக திறப்பு
/
குழந்தைகள் பாதுகாப்பு மையம் அண்ணா நகரில் புதிதாக திறப்பு
குழந்தைகள் பாதுகாப்பு மையம் அண்ணா நகரில் புதிதாக திறப்பு
குழந்தைகள் பாதுகாப்பு மையம் அண்ணா நகரில் புதிதாக திறப்பு
ADDED : மே 26, 2025 03:07 AM

அண்ணா நகர்:அமைந்தகரை அருகில், ஷெனாய் நகரில், சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. அத்துடன், மேல் தளத்தில், மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகமும் செயல்படுகிறது.
இங்கு, பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின், பணி நேரத்தில் அவர்களின் குழந்தைகளை பராமரிக்கும் வகையில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 'மாடல் க்ரீச்' எனும் நவீன குழந்தை பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. இம்மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
அங்கு, 'ஏசி' அறையில், டி.வி., - வண்ணைமயமான குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. பராமரிப்புக்கு பணியாளரும் உள்ளார்.
இதுகுறித்து, மண்டல அலுவலர் கூறியதாவது:
சென்னையில் முதல் முறையாக, அண்ணா நகர் மண்டல அலுவலர்களின் வசதிக்காக, அவர்களின் குழந்தை பாதுகாப்பு மையம், பல்வேறு வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு, 10 வயதுக்கு உட்பட குழந்தைகள் பராமரிக்கப்படும். இதனால், அலுவலர்கள், நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் பணி செய்ய ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.