/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணை, மடிப்பாக்கத்தில் ரூ.650 கோடியில் புதிய வடிகால்வாய்
/
பள்ளிக்கரணை, மடிப்பாக்கத்தில் ரூ.650 கோடியில் புதிய வடிகால்வாய்
பள்ளிக்கரணை, மடிப்பாக்கத்தில் ரூ.650 கோடியில் புதிய வடிகால்வாய்
பள்ளிக்கரணை, மடிப்பாக்கத்தில் ரூ.650 கோடியில் புதிய வடிகால்வாய்
ADDED : அக் 19, 2024 12:42 AM
புழுதிவாக்கம், ''பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதியில் மழைநீர் வெளியேற 650 கோடி ரூபாயில், புதிய கால்வாய் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.
மழைக்காலத்தில் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதியில், தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன், புழுதிவாக்கம் மண்டல அலுவலகத்தில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, நலச்சங்கத்தினரின் கருத்துகளை கேட்டறிந்தார்.
பின், நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் ஆகிய பகுதிகள், சிறு மழைக்கே அதிக பாதிப்பை சந்திக்கும். இம்முறை சென்னை மாநகராட்சி, நீர்வளம், பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை இணைந்து, பணிகளை முன்னெடுத்தன.
முக்கியமாக, நாராயணபுரம் ஏரியின் உபரிநீர் விரைவாக வெளியேறும்படி, அதன் நீர்மட்ட உயரம் 4 அடி குறைக்கப்பட்டது.
இதனால், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் பகுதிகள் மழை பாதிப்பிலிருந்து தப்பின. மழைக்காலத்தில் வேளச்சேரி பகுதி, வெள்ளச்சேரியாக இருக்கும். இதை தடுக்க ரயில்வேயிடம் பெறப்பட்ட இடத்தில், ஆறு வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டதால், நீர் தேங்காமல், உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.
இம்முறை மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மழையால் பாதிக்கப்படவில்லை. பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 650 கோடி ரூபாய் செலவில் புதிய மழைநீர் கால்வாய் பணி, விரைவில் துவங்க உள்ளது. இப்பணி முடிந்தால், வெள்ள பாதிப்பு நிரந்தரமாக தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

