ADDED : ஜன 23, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
'சிங்கார சென்னை அட்டை' வசதி, விரைவு பேருந்துகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது என, விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே அட்டையில் பயணிக்க வசதியாக, 'சிங்கார சென்னை அட்டை' அறிமுகம் செய்யப்பட்டது.
முதலில் மெட்ரோவிலும், கடந்த 6ம் தேதி மாநகர போக்குவரத்து கழகத்தில் துவக்கப்பட்டது. இதையடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும், இந்த அட்டையை பயன்படுத்தும் வசதியை விரைவில் அமல்படுத்த உள்ளோம்.
வெளியூர்களுக்குச் செல்லும், 1,100 விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

