/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மக்களை அச்சுறுத்தும் 'பைக் ரேஸ்' போலீசாருக்கு புதிய உத்தரவு
/
மக்களை அச்சுறுத்தும் 'பைக் ரேஸ்' போலீசாருக்கு புதிய உத்தரவு
மக்களை அச்சுறுத்தும் 'பைக் ரேஸ்' போலீசாருக்கு புதிய உத்தரவு
மக்களை அச்சுறுத்தும் 'பைக் ரேஸ்' போலீசாருக்கு புதிய உத்தரவு
ADDED : ஜூன் 17, 2025 12:49 AM
சென்னை, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி, ரோந்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையின் பல்வேறு பிரதான சாலைகளில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பணத்துக்காகவும், 'ரீல்ஸ்' எடுத்து வீடியோ வெளியிடுவதற்காகவும் சில இளைஞர்கள், 'பைக் ரேஸ்' நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு ஈடுபடும் இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, 'நம்பர் பிளேட்' இல்லாமலும், எண்களை மாற்றியும், அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களை வாகனங்களில் பொருத்தி ஓட்டுவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், 'இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடும்போலீசார், மது அருந்தி வாகனம் ஓட்டுகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
'விதிமுறையின்படி நம்பர் பிளேட் அமைக்காதது, அதிக சத்தம் எழுப்பும் சைலென்சர் பொருத்தி உள்ளவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரண்டு நாட்களாக வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார், இதுபோன்ற விதிமுறைகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.