/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலம்பாக்கத்தில் புதிதாக பூங்கா திறப்பு
/
கோவிலம்பாக்கத்தில் புதிதாக பூங்கா திறப்பு
ADDED : மார் 16, 2025 10:09 PM
கோவிலம்பாக்கம்:கோவிலம்பாக்கம் - சுண்ணாம்பு கொளத்துார் ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம், கோவிலம்பாக்கம், பிரதான சாலையில் உள்ளது. அதில், ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கொட்டப்பட்டு வந்தது.
இதிலிருந்து உருவாகும் ஏராளமான பூச்சிகள், வண்டுகள், கொசு தொல்லையால் அப்பகுதிவாசிகள் தவித்து வந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் பலனாக, குப்பை முழுதும் அகற்றப்பட்டது.
இதையடுத்து கடந்த, 2023ம் ஆண்டு, 30,000 சதுர அடியில் அங்கு, முன்மாதிரி விளையாட்டு, பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்க முடிவானது.
சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதி 23 லட்சம் ரூபாய், ஊராட்சி நிதி 27 லட்சம் ரூபாயில், பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
பூங்காக்களில் சறுக்கு விளையாட்டு அரங்கம், கலைக்கூடம், சிறார் விளையாட்டு பகுதி, நடைபயிற்சி தடம், டென்னிஸ், வாலிபால் மைதானம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதை, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்தரமேஷ் சமீபத்தில் திறந்து வைத்தார்.