/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொ.ப.துறையில் உருவாக்கம்
/
புதிய தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொ.ப.துறையில் உருவாக்கம்
புதிய தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொ.ப.துறையில் உருவாக்கம்
புதிய தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொ.ப.துறையில் உருவாக்கம்
ADDED : மே 24, 2025 12:09 AM
சென்னை : பொதுப்பணித் துறை வாயிலாக, அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சிறப்பு கட்டுமான அமைப்புகளை உருவாக்க, தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
கட்டடங்களின் தரத்தை உறுதி செய்ய, சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் தரக்கட்டுப்பாட்டு கோட்ட அலுவலகங்கள், உபகோட்ட அலுவலங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றின் நிர்வாக கட்டுப்பாடுகள், பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளரிடம் உள்ளன. முதன்மை தலைமை பொறியாளருக்கு அன்றாட பணிகள் மட்டுமன்றி, ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றல் போன்ற காரணங்களால், நேரமின்மை சூழல் ஏற்படுகிறது.
எனவே, நான்கு தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களின் நிர்வாக கட்டுப்பாடுகள், முதன்மை தலைமை பொறியாளரிடம் இருந்து மாற்றப்பட்டு உள்ளன.
இதற்கு பதிலாக, சென்னையை தலைமையிடமாக கொண்டு, புதிதாக ஒரு தரக்கட்டுப்பாட்டு வட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு ஒரு கண்காணிப்பு பொறியாளர், இரண்டு உதவி பொறியாளர்கள், ஒரு தலைமை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட, 27 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, பொதுப்பணித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா பிறப்பித்துள்ளார்.