ADDED : அக் 02, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கநல்லுார்: சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், 166வது வார்டு நங்கநல்லுார் பகுதியில், நேரு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில், நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன.
போதிய இடவசதி இல்லாததால், நுகர்வோர் பொருட்கள் வாங்கும் வசதியுடன், புதிய கடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதே சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், இரண்டு கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நியாய விலைக் கடைகளுக்கு, 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டுமானத்திற்கான பூமி பூஜை போடப்பட்டது. அடுத்த மூன்று மாதத்திற்குள், இந்த கடைகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மண்டல குழு தலைவர் சந்திரன் தெரிவித்துள்ளார்.