/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணிக்கு புதிய வாகனம் ஏழு மண்டலங்களுக்கு வழங்கல்
/
துாய்மை பணிக்கு புதிய வாகனம் ஏழு மண்டலங்களுக்கு வழங்கல்
துாய்மை பணிக்கு புதிய வாகனம் ஏழு மண்டலங்களுக்கு வழங்கல்
துாய்மை பணிக்கு புதிய வாகனம் ஏழு மண்டலங்களுக்கு வழங்கல்
ADDED : ஜூலை 23, 2025 12:16 AM

சோழிங்கநல்லுார் ;சென்னை மாநகராட்சியில், ஏழு மண்டலங்களில், புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், துாய்மை பணியை 'உர்பேசர் சுமித்' நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிறுவனம், பணியை துவங்கி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பல வாகனங்கள் பழுதடைந்துள்ளன. இதனால், துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், சோழிங்கநல்லுார் மண்டலம், திடக்கழிவு மேலாண்மை பணிமனையில், புதிதாக வாங்கப்பட்ட 85 பேட்டரி வாகனங்கள், 14 லாரிகளை, நேற்று மேயர் பிரியா பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் மதியழகன், சுகாதாரத்துறை இணை கமிஷனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.