/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருட்கள் விற்பவர்களின் தகவல் தெரிவிக்க எண் வெளியீடு
/
போதை பொருட்கள் விற்பவர்களின் தகவல் தெரிவிக்க எண் வெளியீடு
போதை பொருட்கள் விற்பவர்களின் தகவல் தெரிவிக்க எண் வெளியீடு
போதை பொருட்கள் விற்பவர்களின் தகவல் தெரிவிக்க எண் வெளியீடு
ADDED : ஜூலை 23, 2025 12:17 AM

சென்னை, சென்னையில், போதை பொருள் விற்பவர்களின் தகவல் தெரிவிக்க வசதியாக, போலீசார் மொபைல் போன் எண் பொது இடங்களில் வைத்துள்ளனர்.
சென்னையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவில் கடைகளில் புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்ய, போலீசார் தடை விதித்துள்ளனர்.
தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இருந்தும், போதை பொருட்கள் வினியோகம் சென்னையில் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லுாரி அருகே தடையை மீறி விற்பனை செய்வோர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக, 94981 00048 என்ற மொபைல் எண் அடங்கிய பேனர்கள் வைத்துள்ளனர்.
இது குறித்து கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், ''கிழக்கு மண்டலத்தில் மட்டும், 280 பள்ளி, கல்லுாரிகள் அருகே, 100 மீட்டர் இடைவேளையில் 660 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தடைசெய்யப்பட்ட பீடி, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.