/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செய்திகள் சில வரிகளில் இறப்பு நிகழ்ந்த வீட்டில் அடிதடி: 3 பேர் கைது

ADDED : ஆக 27, 2025 12:14 AM
வியாசர்பாடி, வியாசர்பாடியில் இறப்பு நிகழ்ந்த வீட்டில் இறுதி ஊர்வலத்தில் அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாசர்பாடி, கென்னடி நகரைச் சேர்ந்தவர் பலராமன், 42. இவரது அண்ணன் வெங்கடேசன், உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. இதில், மதுபோதையில் பங்கேற்ற மர்ம நபர் கும்பல், முன்விரோதம் காரணமாக, வீண் தகராறு செய்து பலராமனை சரமாரியாக தாக்கினர். இதில், அவர் படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடி, கென்னடி நகரைச் சேர்ந்த மணி, 33, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த உதயகுமார், 40, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த சங்கர், 51, ஆகிய மூவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.