ADDED : ஆக 14, 2025 12:40 AM

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் அகில இந்திய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஆணவ படுகொலைகளை தடுக்க, சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு திருவொற்றியூர், ஏழாவது வார்டு, ஒற்றவாடை தெருவில் விதிமீறி கட்டப்பட்ட பஞ்சாட்சரம், ஜானகிராமன் ஆகியோரது வீடுகள் உட்பட எட்டு கட்டடங்களை, நேற்று காலை மண்டல அதிகாரிகள் போலீசாரின் பாதுகாப்புடன் பூட்டி 'சீல்' வைத்தனர்.
தலைமறைவு குற்றவாளி சிக்கினார் சென்னை, மின்ட் தெருவில் போதை பொருள் விற்ற மணிஷ் குமார், 24, உட்பட ஆறு பேரை கைது செய்த போலீசார், 81 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த எம்.கே.பி.நகரைச் சேர்ந்த ஜமாலுதீன், 45, என்பவரை, கொத்தவால்சாவடி போலீசார் நேற்று கைது செய்து, 4.12 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
ரூ.9 லட்சம் மோசடி புகார் கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா, 48. மளிகை கடை உரிமையாளர். இவரது கணவர் சீனிவாசன் மூலம் பழக்கமான கஜேந்திரன் என்பவர், தன் 'அயன் ஸ்கிரப் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம்' என ஆசை வார்த்தை கூறி, கடந்த 2022ல் 9.37 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியுள்ளார். போலீசார் வழக்கை பதிவு செய்யக்கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் லட்சுமி பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, கொடுங்கையூர் போலீசார், நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.