ADDED : அக் 08, 2025 02:39 AM
கஞ்சா வைத்திருந்த
வாலிபருக்கு 'காப்பு'
குன்றத்துார்: குன்றத்துார் கரைமா நகரில் ரோந்து பணியில் இருந்த குன்றத்துார் போலீசார், தங்களை கண்டதும் பயந்து தப்பியோட முயன்ற பிரதாப், 23, என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவரை சோதனை செய்தபோது, ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. போலீசார், பிரதாப்பை கைது செய்தனர்.
2 கிராம் நகை
திருடியவர் கைது
குன்றத்துார்: சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜெயந்தி, 53. கடந்த மாதம் 21ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 2 கிராம் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, நகையை திருடிய, நடுவீரப்பட்டு ராம்ஜி நகரை சேர்ந்த கார்த்திக், 34, என்பவரை கைது செய்தனர்.
பாலஸ்தீன மக்களுக்கு
ஆதரவாக ஆர்ப்பாட்டம்
செம்பாக்கம்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா மற் றும் இஸ்ரேலை கண்டித்து, அனைத்து வட்டார ஐக்கிய ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சேலையூரை அடுத்த காமராஜபுரத்தில், நேற்று மாலை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ம.ம.க., மாநில துணை பொதுச் செயலர் யாக்கூப் மற்றும் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.
தாம்பரத்தில் நாளை
மின் குறைதீர் கூட்டம்
சென்னை: தாம்பரம், முல்லை நகர் துணை மின் நிலைய வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெற லாம்.