/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பனையூர் உழவர்கேணி குளம் ரூ.1.70 கோடியில் மேம்பாடு
/
பனையூர் உழவர்கேணி குளம் ரூ.1.70 கோடியில் மேம்பாடு
ADDED : அக் 08, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனையூர், இ.சி.ஆர்., பனையூரில் உள்ள உழவர்கேணி குளம், 1.70 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, இ.சி.ஆர்., பனையூரில், 15,418 சதுர மீட்டர் பரப்பு கொண்ட உழவர்கேணி குளம் உள்ளது. இந்த குளம், பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மழைநீர் தேங்காமல், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் குறைந்தது.
இந்நிலையில், இந்த குளத்தை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கரையை பலப்படுத்தி ஆழப்படுத்த, 1.70 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியது.
இதற்கான பணி விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.