/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாள்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் 'அக்குபஞ்சர்'; நம்பிக்கையளிக்கிறார் டாக்டர் முத்தாஹர் உன்னிசா
/
நாள்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் 'அக்குபஞ்சர்'; நம்பிக்கையளிக்கிறார் டாக்டர் முத்தாஹர் உன்னிசா
நாள்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் 'அக்குபஞ்சர்'; நம்பிக்கையளிக்கிறார் டாக்டர் முத்தாஹர் உன்னிசா
நாள்பட்ட நோய்களையும் குணப்படுத்தும் 'அக்குபஞ்சர்'; நம்பிக்கையளிக்கிறார் டாக்டர் முத்தாஹர் உன்னிசா
ADDED : ஜன 16, 2022 02:14 AM
நம் உடலில் ஏதேனும் இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்தி தேய்து விடுகிறோம். இதனால், வலி குறைகிறது. அதேபோல், நம் உடல் முழுதும் உள்ள அக்குபிரஷர் புள்ளிகளில், வலியுள்ள பகுதியில் உள்ள புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்போது, அப்பகுதியில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் துாண்டப்படுகின்றன.
அவ்வாறான அக்குபிரஷர் புள்ளிகளை மையமாக வைத்தே, அக்குபஞ்சர் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. இம்முறையில் நாள்பட்ட நோய்களையும் குணப்படுத்தலாம் என்கிறார், சென்னை போரூரைச் சேர்ந்த அக்குபஞ்சர் டாக்டர் முத்தாஹர் உன்னிசா, 34.அவரிடம் பேசியதில் இருந்து:உங்களை பற்றி சொல்லுங்கள்?என் சொந்த ஊர், சென்னை சைதாபேட்டை. சிறு வயதில் இருந்து, மருந்தில்லா மருத்துவம் சார்ந்த துறைகளில் பயின்று, டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. பிளஸ் 2 வரை, ஜெயகோபால் கரோடியா பள்ளி. பின், பி.எஸ்.சி., சைக்காலஜி பட்டம் படித்தேன்.மருத்துவமத்தின் மீதான ஆர்வத்தால், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் அகாடமியில், எம்.டி., அக்குபஞ்சர் மருத்துவம் பயின்றேன். தற்போது, மாங்காடு அடுத்த பட்டூரில், 'தாஹா' என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறேன்.அக்குபஞ்சர் மருத்துவம் என்றால் என்ன? இதற்கான முகாம்கள் நடத்தப்படுகின்றனவா?அக்குபஞ்சர் மருத்துவம் என்பது, மருந்து மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவ முறை. இந்த முறையில், நாடி பரிசோதனை வாயிலாகவும், உடலில் பஞ்சபூத சக்திகளின் ஓட்டத்தை வைத்து நோய் பாதிப்புகளை அறிந்து, சிகிச்சை அளிக்கலாம். மனித உடலில், தலை முதல் பாதம் வரை, மொத்தம் 361 அக்கு புள்ளிகள் உள்ளன. இவற்றை வைத்து, பஞ்ச பூத சக்திகளை துாண்டி, உடலில் நாள்பட்டு தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி மருத்துவம் செய்ய முடியும். அக்குபஞ்சர் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறேன். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இலவச முகாம்கள் நடத்தி இருக்கிறேன்.முகாம் அமைக்க இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால், இலவச முகாம்கள் நடத்த தயாராக இருக்கிறேன். இது தொடர்பாக, 98404 -29313 என்ற என் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். நாள்பட்ட நோய்கள் எவை?கல்லீரல், சிறுநீரக பிரச்னைகள், குழந்தையின்மை, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள், கருப்பை நீர்க்கட்டி, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, சைனஸ், தைராய்டு, மூட்டு மற்றும் முடக்குவாத நோய்கள், தோள்பட்டை வலி, தோல் நோய்கள் போன்றவை நாள்பட்ட நோய்களாகும்.தவிர, புற்றுநோய் மற்றும் மனநோய் பாதிப்புகளை, ஆரம்ப நிலையில் கண்டறிந்தாலும், இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து நோய்களுக்கும் நான் சிகிச்சை அளித்தாலும், பக்கவாதம், நீரிழிவு, பெண்களுக்கான மாதவிடாய் நோய்கள், மனநிலை பாதிப்பு ஆகியவற்றின் சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.சிகிச்சை முறை என்ன? பக்கவாதத்தை பொறுத்தவரை, உடலில் எந்த கை, கால்கள் செயல்படவில்லை என்றாலும், அதற்கான நரம்புகளின் அக்கு புள்ளிகளை கண்டறிந்து, அங்கு குத்துாசி குத்தி, அதில் இருந்துகாந்த ஆற்றலை துாண்டிவிட வேண்டும். இவ்வாறு, நோயாளிகளின் பாதிப்பிற்கேற்ப, இரண்டு முதல் ஆறு மாதம் வரை செய்ய வேண்டும். நோயாளிகள், குளிர்ச்சியான உணவு பொருட்களை தவிர்த்து, உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் விதமான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இதுவரை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த, மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு, நான்கு மாதங்களில் சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்தி உள்ளேன் நீரிழிவு நோயை பொறுத்தவரை, வரும் முன் காக்கவும், வந்தபின் குணப்படுத்தவும் முடியும். இந்த இரண்டிற்குமே, முறையாக நாடி பார்த்து, அதற்கேற்றாற்போல், கட்டைவிரலில் உள்ள அக்கு புள்ளிகளை, 15 முதல் 20 முறை அழுத்தம் கொடுப்பதுடன், நோய் பாதிப்பிற்கேற்ப, மூலிகை மருந்துகளை உட்கொள்ள வேண்டும் பெண்களுக்கான மாதவிடாய் நோய்களில், கட்டைவிரல் மற்றும் பாதங்களில் ஆரம்பிக்கும் அக்கு புள்ளிகளை கண்டறிந்து, அங்கும், குத்துாசி குத்தி அவற்றை, துாண்டிவிட வேண்டும்;
இதற்கு, உள் மருந்துகள் கிடையாது மன நிலை பாதிப்புக்கான சிகிச்சையை பொறுத்தவரை, தலை, கைகளில் உள்ள புள்ளிகளை அழுத்தி, இரண்டு இடங்களிலும், குத்துாசி வாயிலாக காந்த ஆற்றலை துாண்டிவிட வேண்டும்; இதற்கும், உள் மருந்துகள் கிடையாது.
- -நமது நிருபர்- -