/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெய்தல் நகர் இணைப்பு குழாய் பழுது எர்ணாவூரில் குடிநீர் 'சப்ளை' பாதிப்பு
/
நெய்தல் நகர் இணைப்பு குழாய் பழுது எர்ணாவூரில் குடிநீர் 'சப்ளை' பாதிப்பு
நெய்தல் நகர் இணைப்பு குழாய் பழுது எர்ணாவூரில் குடிநீர் 'சப்ளை' பாதிப்பு
நெய்தல் நகர் இணைப்பு குழாய் பழுது எர்ணாவூரில் குடிநீர் 'சப்ளை' பாதிப்பு
ADDED : நவ 25, 2025 04:56 AM
எண்ணுார்: நெய்தல் நகர் இணைப்பு குழாயில் ஏற்பட்டுள்ள குழாய் பழுது காரணமாக, எர்ணாவூரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகளில், 3.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், தெருக்குழாய்கள், லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. தற்போது, அந்த திட்டத்தின் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்ட நிலையில், புழல் ஏரி நீர் வழங்கப்படுகிறது.
அதன்படி, ராட்சத குழாய் வழியாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, மணலி - எம்.எப்.எல்., குடிநீரேற்று நிலையம் வழியாக, எர்ணாவூர் சுற்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால், அழுத்தம் குறைவால் மேடான பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பின், நெய்தல் நகர் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, பாலாஜி நகர், எர்ணாவூர் முருகன் கோவில் சந்திப்பு வழியாக, ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின், குடிநீர் வினியோகம் சீரானது.
இந்த நிலையில், ரயில்வே தண்டவாளத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய் சேதமானதால், அதன் வழியாக குடிநீர் வினியோகமாவதில் மீண்டும் சிக்கல் ஏற்படவே, பழைய படி, எம்.எப்.எல்., சந்திப்பு குடிநீரேற்று நிலையம் வழியாகவே குடிநீர் வினியோகமாகிறது. இதனால், அழுத்தம் குறைவு ஏற்பட்டு, மேடான பகுதிக்கு குடிநீர் ஏறுவதில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சேதமான குழாயை சீரமைத்து, நெய்தல் நகர் குடிநீரேற்று நிலையத்தில் இருந்தே குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது

