/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விக்டோரியா பூங்காவில் தேங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கழிவு நீர்
/
விக்டோரியா பூங்காவில் தேங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கழிவு நீர்
விக்டோரியா பூங்காவில் தேங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கழிவு நீர்
விக்டோரியா பூங்காவில் தேங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கழிவு நீர்
ADDED : நவ 25, 2025 04:56 AM

அம்பத்துார்: அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், விக்டோரியா பூங்காவில் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அம்பத்துார் மண்டலம், 86வது வார்டு, வி.ஜி.என்., நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு, விக்டோரியா பூங்கா அமைந்துள்ளது.
அதில், முதியவர்கள், கர்ப்பிணியர் உட்பட 100க்கும் மேற்பட்டோர், தினமும், நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பூங்காவின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறி, பூங்காவினுள் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம், கொசு தொல்லை என சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளத.
இது குறித்து, பகுதி தி.மு.க., கவுன்சிலர் கமல், சுகாதார அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
எனவே, மர்ம காய்ச்சல் பரவும் சுழலில் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.