/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கு வரும் வாகனங்களால் திருவொற்றியூர் சாலை ஸ்தம்பிப்பு
/
பள்ளிகளுக்கு வரும் வாகனங்களால் திருவொற்றியூர் சாலை ஸ்தம்பிப்பு
பள்ளிகளுக்கு வரும் வாகனங்களால் திருவொற்றியூர் சாலை ஸ்தம்பிப்பு
பள்ளிகளுக்கு வரும் வாகனங்களால் திருவொற்றியூர் சாலை ஸ்தம்பிப்பு
ADDED : நவ 25, 2025 04:56 AM
திருவொற்றியூர்: தனியார் பள்ளிகளில், காலை, மாலை வேளைகளில் பிள்ளைகளை அழைத்து செல்ல வரும் பெற்றோர்கள் சாலையிலேயே வாகனங்களை 'பார்க்கிங்' செய்வதால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
திருவொற்றியூர், சுங்கச்சாவடி சந்திப்பு - விம்கோ நகர் வரையிலான, திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டி, பத்துக்கும் மேற்பட்ட அரசு - தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
இதில், தனியார் பள்ளிகள் முடிந்து மாணவர்கள் வெளியேறும் நேரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காரணம், தங்களது பிள்ளைகளை அழைத்து செல்ல வந்து காத்திருக்கும் பெற்றோர், அவர்கள் வந்த பைக், ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட வாகனங்களை, சாலையிலேயே பார்க்கிங் செய்வதால், மற்ற வாகனங்கள் பயணிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.
குறிப்பாக, பள்ளி காவலாளிகளும், அத்துமீறும் மாணவர்களின் பெற்றோர்களை கண்டிப்பதில்லை.
விளைவு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பெற்றோர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் கவனித்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மாலை, 3:30 - 5:00 மணி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் பள்ளிகள் அருகே, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

