/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டீக்கடைக்காரரிடம் வழிப்பறி: 4 பேர் கைது
/
டீக்கடைக்காரரிடம் வழிப்பறி: 4 பேர் கைது
ADDED : நவ 25, 2025 04:57 AM
சென்னை: டீக்கடைக்காரரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜா அண்ணாமலைபுரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாண்டிதுரை, 57. இவர், சத்யா நகர், எஸ்.கே.பி.புரம் பிரதான சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை சத்யா நகர் விளையாட்டு மைதானம் அருகே நடந்து சென்றார். அப்போது, நான்கு பேர் கும்பல் அவரை வழிமறித்து, கத்திமுனையில் 1,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இது குறித்து விசாரித்த அபிராமபுரம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மந்தைவெளியைச் சேர்ந்த லோகநாதன், 26, புருஷோத்தமன், 27, கார்த்தீஸ்வரன், 21, ஸ்ரீமாதேஷ், 19,ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, கத்தி, 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டோர் மீது, ஏற்கனவே கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

