/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எர்ணாவூரில் ஜல்லி கொட்டி 3 மாதமாகியும் தார் சாலை அமைக்காததால் மக்கள் அவதி
/
எர்ணாவூரில் ஜல்லி கொட்டி 3 மாதமாகியும் தார் சாலை அமைக்காததால் மக்கள் அவதி
எர்ணாவூரில் ஜல்லி கொட்டி 3 மாதமாகியும் தார் சாலை அமைக்காததால் மக்கள் அவதி
எர்ணாவூரில் ஜல்லி கொட்டி 3 மாதமாகியும் தார் சாலை அமைக்காததால் மக்கள் அவதி
ADDED : நவ 25, 2025 04:57 AM

எண்ணுார்: எர்ணாவூரில், ஜல்லி கொட்டி மூன்று மாதங்களாகியும், தார் சாலை அமைக்காததால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் - திருவீதியம்மன் நகர், 5வது தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் சாலை பள்ளமாகி படுமோசமாக இருந்தது. இங்கு, தார் சாலை அமைக்கும் பணிக்கு, ஓராண்டிற்கு முன் ஒப்பந்தம் கோரப்பட்டும், பணிகள் துவக்கப்படவில்லை.
பின், கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளூர் மக்களின் அழுத்தம் காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன், சாலை சுரண்டப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால், தார் சாலை அமைக்கும் பணியை மட்டும் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால், கரடு முரடான சாலையில் பயணிக்க முடியாமல், அப்பகுதியைச் சேர்ந்த குழந்தை, முதியவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். செருப்பு அணியாமல் செல்பவர்களின் கால்களை, ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன.
இதுகுறித்து, மா.கம்யூ., கவுன்சிலர் ஜெயராமன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டாலும் போனை எடுப்பதில்லை என, தெரிகிறது.
எனவே, மாநகராட்சி உயரதிகாரிகள் கவனித்து, கிடப்பில் கிடக்கும் எர்ணாவூர் - திருவீதியம்மன் நகர், 5வது தெருவின் தார் சாலை பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்த நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

