ADDED : நவ 08, 2025 02:47 AM

சென்னை: தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில், 284 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர்.
திருவான்மியூர் ராஜிவ்காந்தி சாலையில், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனமான என்.ஐ.எப்.டி., செயல்பட்டு வருகிறது. அதன், 14வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காதிதுறை செயலர் அமுதவல்லி பேசு கையில், ''மாணவ - மாணவியரின் நான்கு ஆண்டு உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, இந்த பட்டம். தொழில்நுட்பமும், கண்டுபிடிப்பும் தான் நாளைய எதிர்காலம்.
'' அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக வர்த்தகம் உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் மனநிலை எப்போதும் நேர்மறையான எண்ணங்களோடு இருக்க வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, விருது பெற்ற மாணவ - மாணவியர் உட்பட, 284 பேருக்கு பட்டங்களை காதி செயலர் அமுதவல்லி வழங்கி ஊக்கப்படுத்தினார்.

