ADDED : டிச 18, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நெகேகாகொனாமோ பிரீசியஸ், 24, என்ற பெண், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, 2023, செப்., 6ல் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளின் அறைகளில், நேற்று வழக்கமான சோதனையை நடத்தினர்.
அப்போது, அவர்களை மிரட்டிய நைஜீரிய பெண் கைதி, ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் நின்று, சிறை காவலர்களை வெளியேறும்படி ரகளை செய்துள்ளார்.
மேலும், தடுக்க முயன்ற பெண் சிறை காவலர் லத்திகா பீவி என்பவருக்கு, நகக்கீறலால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

