/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் ரூ.20 கோடி 'கோகைன்' கடத்தி வந்த நைஜீரிய பெண் கைது
/
விமானத்தில் ரூ.20 கோடி 'கோகைன்' கடத்தி வந்த நைஜீரிய பெண் கைது
விமானத்தில் ரூ.20 கோடி 'கோகைன்' கடத்தி வந்த நைஜீரிய பெண் கைது
விமானத்தில் ரூ.20 கோடி 'கோகைன்' கடத்தி வந்த நைஜீரிய பெண் கைது
ADDED : ஆக 25, 2025 11:32 PM
சென்னை, கத்தாரில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, 20 கோடி ரூபாய் மதிப்பிலான 'கோகைன்' போதை பொருள் கடத்தி வந்த நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு வரும் சர்வதேச விமானங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் என்.சி.பி., எனும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த, 45 வயதுடைய நைஜீரிய நாட்டு பெண் பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'கோகைன்' போதை பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, என்.சி.பி., அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்தனர்.
ரூ.1.10 கோடி தங்கப்பசை அதேபோல, நேற்று முன்தினம், மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, காலை 7:30 மணிக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த தம்பதி மீது, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, தம்பதியின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணியின் ஷூவிலும், பெண் பயணி தன் உடையின் உள் பகுதியில் டேப்பால் ஒட்டியும், தனித்தனியாக, 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள, பசை வடிவில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.