/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செடிகளால் உறுதி இழக்கும் அமைந்தகரை கூவம் பாலம்
/
செடிகளால் உறுதி இழக்கும் அமைந்தகரை கூவம் பாலம்
ADDED : அக் 24, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அமைந்தகரை பகுதியில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கூவம் கால்வாய் செல்கிறது. இங்குள்ள கூவம் கால்வாயின் தரைப்பாலம், போதிய பராமரிப்பின்றி உள்ளது.
குறிப்பாக, அண்ணா வளைவில் இருந்து, அமைந்தகரையை நோக்கிச் செல்லும் பாலத்தின் இருபுறத்திலும் செடிகள் முளைத்து, படுமோசமான நிலையில் உள்ளது.
இதனால், பாலம் உறுதி தன்மையை இழக்கும் அபாயம் நிலவுகிறது. அதேபோல், தரைப்பாலத்தில் இரு பாதையிலும் அத்துமீறி, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.சங்கீதா, பாடி