/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நொளம்பூர் சார் -- பதிவாளர் ஆபீசில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
/
நொளம்பூர் சார் -- பதிவாளர் ஆபீசில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
நொளம்பூர் சார் -- பதிவாளர் ஆபீசில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
நொளம்பூர் சார் -- பதிவாளர் ஆபீசில் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு
ADDED : ஜூலை 12, 2025 12:19 AM
சென்னை, நொளம்பூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த சேவை மையம் நேற்று திறக்கப்பட்டது.
சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் தயாரிப்பு, கட்டணம் செலுத்துதல், டோக்கன் பெறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளில் பதிவுத் துறை ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 2024 - 25 நிதியாண்டில், 33.60 லட்சம் பத்திரங்கள் பதிவாகின. சென்னை மண்டலத்தில் மட்டும், 3.30 லட்சம் பத்திரங்கள் பதிவாகின.
பதிவுத் துறையின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, நொளம்பூரில் உள்ள சார் - பதிவாளர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளால் இந்த மையம் நடத்தப்பட உள்ளது.
இதில் கிரய பத்திரங்கள் தயாரித்தல், வில்லங்க சான்றுக்கு விண்ணப்பித்தல், திருமண பதிவு சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், பதிவுக்கான டோக்கன் பெறுதல், சங்கங்கள் பதிவு, நிறுவனங்கள் பதிவு தொடர்பான 'ஆன்லைன்' சேவைகளை பெறலாம்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த மையத்தை, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.