தரமற்ற வெங்காயம் விற்பனை :ரேஷன் ஊழியர் 'சஸ்பெண்ட்'
தரமற்ற வெங்காயம் விற்பனை :ரேஷன் ஊழியர் 'சஸ்பெண்ட்'
UPDATED : அக் 12, 2026 09:30 PM
ADDED : அக் 12, 2026 09:18 PM
சென்னை: தரமற்ற வெங்காயம் வினியோகம் செய்தது தொடர்பான புகாரை அடுத்து, ரேஷன் கடை ஊழியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு, சென்னை மதுரவாயலில் ரேஷன் கடை உள்ளது.
அந்த கடையில் பணிபுரியும் யுவராணி என்பவர், தரமற்ற வெங்காயத்தை விற்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, பண்டகசாலை இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொது செயலர் தினேஷ்குமார் கூறுகையில், ''ரேஷன் கடைகளுக்கு மூன்றாம் கட்டமாக அனுப்பப்பட்ட வெங்காயத்தின் தரம் மிக மோசமாக உள்ளது. இது, அதிகாரிகளுக்கே தெரியும். எனவே, 'சஸ்பெண்ட்' செய்த பணியாளருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இல்லையேல் ரேஷன் கடைகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
