/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாக்டர் அமர் அகர்வாலுக்கு நார்மன் காலோவே விருது
/
டாக்டர் அமர் அகர்வாலுக்கு நார்மன் காலோவே விருது
ADDED : ஜன 26, 2024 12:53 AM
சென்னை, பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பல்கலையில், கண் கருத்தரங்கம் மற்றும் ஆராய்ச்சி கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில், டாக்டர் அமர் அகர்வால் பேரூரை ஆற்றினார். இதன்வாயிலாக, அப்பல்கலையில், இந்திய டாக்டர் ஒருவர் பேரூரையாற்றும் கவுரவித்தை அமர் அகர்வால் பெற்றார்.
தொடர்ந்து, 'நார்மன் காலோவே' விருதும், அமர் அகர்வாலுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதுகுறித்து, டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது:
கண் மருத்துவத்தில் திசு பசையை பயன்படுத்தி, கண்ணுக்குள் லென்ஸ்களை பொருத்துகிற, 'குளூட் ஐ.ஓ.எல்.' போன்ற புதிய சிகிச்சை உத்திகள் உள்ளன.
அதேபோல், 25 மைக்ரான் அளவே உடைய ஒரு மெல்லிய கருவிழி உறுப்புமாற்று சிகிச்சையில் நவீன யுக்திகளை கையாள முடியும். உலகின் புகழ்பெற்ற கண் மருத்துவவியல் நிபுணர் நார்மன் காலோவேவின், பேருரை மற்றும் அவரது பெயரிலான விருதை பெறுவது சிறந்த கவுரவம்.
இவ்வாறு அவர் கூறினார்.

