/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை கிரைம் கார்னர்: ரூ.1,000 பறிப்பு: திருநங்கையரிடம் விசாரணை
/
வடசென்னை கிரைம் கார்னர்: ரூ.1,000 பறிப்பு: திருநங்கையரிடம் விசாரணை
வடசென்னை கிரைம் கார்னர்: ரூ.1,000 பறிப்பு: திருநங்கையரிடம் விசாரணை
வடசென்னை கிரைம் கார்னர்: ரூ.1,000 பறிப்பு: திருநங்கையரிடம் விசாரணை
ADDED : டிச 16, 2025 05:02 AM
புழல்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் படேல், 30; சுமை துாக்கும் தொழிலாளி. இவர், புழல்- செங்குன்றம் நெடுஞ்சாலை ஜே.கே.மஹால் பகுதி வழியாக, நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த நான்கு திருநங்கையர், அவரிடம் இருந்த 1,000 ரூபாயை பறித்துச் சென்றனர். விசாரித்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சிதா, 30, ஜெயஸ்ரீ, 34, கயல்விழி, 28 மற்றும் அஸ்விதா, 28 ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.
***
மொபைல் போன் திருடியவர் சிக்கினார்
புளியந்தோப்பு: ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனிபாஸ் ரெட்டி, 38. இவர், சூளை ஏரான் தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, அவரது மொபைல் போன் உட்பட இருவரது போன்கள் திருட்டு போயின. விசாரித்த வேப்பேரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 20, என்பவரை நேற்று கைது செய்தனர்.
***
போதையில் நண்பரை வெட்டிய 4 சிறுவர்கள்
மாதவரம்: மாதவரம் தெலுங்கு காலனியைச் சேர்ந்தவர் கிஷோர், 26. இவர், நண்பர்கள் ஐந்து பேருடன் நேற்று முன்தினம் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. பின் சமாதானமாகி வீட்டிற்கு சென்ற கிஷோரை, வழிமறித்த அவரது நண்பர்கள், கத்தியால் தலையில் வெட்டி தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த கிஷோர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரித்த மாதவரம் போலீசார், கிஷோரை வெட்டிய நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
***
துணிக்கடையில் ரூ.4,000 திருட்டு
ஆவடி: ஆவடி, கன்னிகா புரத்தைச் சேர்ந்தவர் சித்திக் ரஹ்மான், 52. இவர், ஆவடி, பழைய நேரு பஜாரில் 'மென்ஸ் வேர்' என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கல்லாவில் இருந்த 4,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. ஆவடி போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சித்திக் ரஹ்மானின் தம்பி பசூர் ரஹ்மான், 43, என்பவர், துணிக்கடையில் ஷட்டர் பூட்டை உடைத்தது பதிவாகி இருந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

